சாலையை சீரமைக்க கோரி ஹைவேவிஸ் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு

பதிவு செய்த நேரம்:2012-09-12 12:44:51

சின்னமனூர், : சாலையை சீரமைக்க கோரி ஹைவேவிஸ்  தொழிலாளர் கள் தொடர் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ள னர்.
சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பகுதியில் 10ஆயிரத்திற்கும்  அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். தேயிலை தோட்டங்களில்  சுமார் 3,500 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த 1978க்கு பின்னர்  ஹைவேவிஸ் சாலை சீரமைக்கப்பட வில்லை. இதனால் மரண  பள்ளங்கள் நிறைந்து சாலை ஆபத்தான வகையில் உள் ளது.  இதனால் ஹைவேவிஸ் பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின் றனர். பேருந்துகள் சரிவர செல்ல முடியவில்லை. இதர வாக  னங்களும் செல்ல முடியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரு கின்றன.
ஹைவேவிஸ் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நிர்வாகிகளின் கூ ட்டம் எச்.எம்.எஸ் தொழிற்சங்க குரூப் செயலாளர் முத்தை யா  தலைமையில் நடந்தது. எல்.பி.எப் குரூப் செயலா ளர் மனோகரன்  முன்னிலை வகித்தார். ஏ.டி.பி தொழிற்சங்க செயலாளர் சஞ் சீவிபாண்டி வரவேற்றார்.
ஐ.என்.டி.யூ.சி குரூப் செயலாளர் சண்முகம், நிர்வாகிகள்  அலெக்சாண்டர், அந்தோணி, துரைப்பாண்டி, மாரியப்பன், கர்த்  தர், பவுன்ராஜ், நாகராஜ், குமார், முருகன், மணி, கலைவாணர்,  சங்கிலிராஜ், பாண்டி மகராஜன், சுகு மாறன், பிச்சை, ராசு, சந் திரசேகர், ஆரோக்கியசாமி, தங்கையா, செல்வக்குமார் உள்பட  300பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம்: கடந்த 30வருடங்களுக்கும்  மேலாக சாலை சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக உள்ள து. சரி வர பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள்  அவதியடைகின்ற னர். கடந்த ஜூன் 19ம் தேதி ஒருநாள்  அடையாள வேலை நிறுத்தம் செய் தோம்.
பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை  எடுக்கவில்லை. செப்.15ல் மீண்டும் தொழிலாளர்கள் அடையாள  வேலை நிறுத்தம் செய்வது, செப்.24 ஹைவேவிஸ் பேரூராட்சி அலு  வலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் இருப்பது, அக்.2ல்  வாக்காளர் அடை யாள அட்டைகளை கலெக்டரிடம்  ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

Courtesy: Dinakaran.com – http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=93014&cat=504

Image: http://vromonatnet.com/travelblog/archives/category/places/meghamalai

Advertisements