கம்பத்தில் பரவும் மர்ம காய்ச்சல்

பதிவு செய்த நேரம்:2012-09-12 12:39:32

கம்பம், : கம்பம், கூடலுர் பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வரு கிறது. 15வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள் ளனர்.
கம்பம், கூடலுர், காமயகவுண்டன்பட்டி, புதுப்பட்டி மற்றும் பல  கிராமங்களை சேர்ந்த 15வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கடந்த சில  தினங்களாக இருமலுடன் கூடிய மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு  வருகின்றனர். இவர்கள் தினமும் தனியார் மற்றும் அரசு மருத்து வமனைகளில் சிகிச்சை பெற்று வருகி ன்றனர். பருவநிலை மாற்ற த்தின் காரணமாக இந்த காய்ச்சல் பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது.  அரசு மருத்துவமனைக்கு வரும் இவர்களுக்கு ரத்தம், சிறுநீர்  பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது.
டாக்டர்கள் கூறுகையில், தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். சீதோஷ்ண நிலை  மாறியதால் காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக சிறுவர்கள்,  குழந்தைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். குடிநீரை காய்ச்சி  குடிக்க வேண்டும். கொசுக்கள் பெருகாத அளவிற் கு சுற்றுப்புறத் தை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும், என்றனர்.

Couretsy: Dinakaran.com – http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=93001&cat=504

Advertisements