உத்தமபாளையம் அருகே வாழை தோட்டங்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்: தடுக்க விவசாயிகள் புதிய வியூகம்

உத்தமபாளையம், செப்.11-

உத்தமபாளையம் பகுதியில் வாழை தோட்டங்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகள் தடுக்க விவசாயிகள் புதிய வியூகம் அமைத்து தடுத்து வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம், ராயப்பன் பட்டி, அனைப்பட்டி ஆகிய ஊர்களில் வாழை விவசாயத்திற்கு ஏற்றவாறு மண் வளம், மற்றும் இயற்கையான சீதோசனநிலை இருப்பதால் அதிகளவில் வாழை விவசாயம் நடைபெறுகிறது. இங்கு விளையும் வாழைதார்கள் சென்னை, பெங்ளூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பெரும் நகரங்களுக்கும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது.

சொட்டு நீர் மூலமாகவும், பாத்திகட்டி வாழை விவசாயம் செய்து வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பருவமழை பொய்த்துப் போனதால் நீர் நிலைகள் வறண்டும் முதல் போக நெல் நடவுபணி முழுமை பெறாமல் பெரும் பகுதி நிலங்கள் தரிசுகளாக காட்சி அளிக்கிறது, இந்த நிலையில் ராயப்பன் பட்டி, ஆனைமலையன் பட்டி உள்ளிட்ட இடங்களில் வாழை தோட்டங்களில் இரவு நேரங்களில் காட்டு பன்றிகள் நுழைந்து வாழை தார்களை நாசம் செய்து வருகின்றனர், வாழைதார்கள் பலன் கிடைக்கும் நேரத்தில் பாழாகி வருவதால் விவசாயிகள் மத்தியில் கவலை அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆனை மலையன் பட்டியை சேர்ந்த விவசாயி ரவி கூறியதாவது:-

காட்டுப் பன்றிகாளால் வாழை விவசாயம் கடுமையாக பாதிப்பு அடைந்து வருகிறது. சேதம் ஏற்படுத்தும் பன்றிகளை தடுக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல முறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் வெறுத்துப்போன நாங்கள் வாழை விவசாயத்தை காப்பாற்ற வாழை தோட்டங்களை சுற்றி இரண்டு கம்புகளை நட்டு கம்பு மீது உரசாக்கு பைகளை மாட்டி விடுவோம் இரவு நேரங்களில் வாழை தோட்டத்திற்கு வரும் காட்டுப்பன்றிகள் ஆள் அமர்ந்து உள்ளனர் என்று தோட்டத்திற்குள் வராமல் சென்று விடுகிறது, இதன்மூலம் வாழை விவ சாயத்தை காப்பாற்றி வருகிறோம்.

இவ்வாறு விவசாயி கூறினார்.

Courtesy:  Maalaimalar.com – http://www.maalaimalar.com/2012/09/11144855/uthamapalayam-Banana-plantatio.html

Advertisements