தேனியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

பதிவு செய்த நேரம்:2012-09-13 12:05:16

தேவாரம், : தேனி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண் டும் என்று பதினெட்டாம் கால்வாய் விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
பதினெட்டாம் கால் வாய் விவசாயிகள் சங்கம் ஆலோசனைக்கூட்டம், கோம்பையில்  நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் ராமராஜ் தலைமை தாங் கினர். செயலாளர் திருப்பதிவாசகன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர்கள் காளிமுத்து, தங்க ராஜ், சலேத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட னர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தேனி மாவட்டம் முழுக்க விவசாயம் சார்ந்த மாவட்ட மாக உள்ளது. கம்பம் பள்ளதாக்கில் முதல்போகம் பாதிக்கப்பட்டுள்ளது. தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் காய்கறி, தென்னை உள் ளிட்ட விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயக்கூலித்தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.
எனவே இம்மாவட்டத் தை தமிழக அரசு வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக் கும், கூலித்தொழிலாளர்களுக்கும் இழப்பீடு தொகை யினை வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Courtesy: Dinakaran.com – http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=93693&cat=504

Advertisements