கம்பம் அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ்க்கு நவீன சிகிச்சை மையம்

பதிவு செய்த நேரம்:2012-09-12 12:39:43

கம்பம், : கம்பம் அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய்க்கு நவீன  சிகிச்சை மையம் விரை வில் துவங்கப்பட உள்ளது.
கம்பம் அரசு மருத்துவமனையில் தற்போது பொது மருத்துவம், சி த்த மருத்துவம், தீக்காய பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி,  குழந்தைகள் நல மருத்துவம், கர்ப்பிணிகளுக்கான சீமாங் சென்டர்  உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு  வருகின்றன.
இங்கு செயல்பட்டு வரும் எய்ட்ஸ் தடுப்பு மையத்தில் உள்ள  வசதிகளை அதிகப்படுத்தி நோயாளிகளு க்கு நவீன சிகிச்சை  அளிக்கும் வகையில், இம்மாத இறுதியில் அனைத்து வசதிகளுடன்  கூடிய எய்ட்ஸ் தடுப்பு மையம் செயல்பட உள்ளது.
இந்த மையத்தில் ஒரு டாக்டர், பார்மசிஸ்ட் மற்றும் நர்சுகள் இரு ப்பர். ரத்தத்தில் 150க்கும் குறைவாக வெள்ளைஅணுக்கள் உள்ள  நோயாளிகளுக்கு ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை அளித்து ம ருந்து மாத் திரைகள் வழங்கப்படும். தற்போது வெளி நோயாளிகள்  பிரிவு செயல்படும் கட்டிடத்தில் இம்மாத இறு திக்குள் இந்த  மையம் தொடங்க உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
டாக்டர்கள் கூறுகையில், தமிழகத்தில் இந்த மையம் மாவட்டத் திற்கு ஒன்றும், ஒரு சில மாவட்டங் களில் இரண்டும் உள்ளது.  இந்நிலையில் தேனி மாவட்டத்தில் மருத்துவ கல்லுரி மருத்து மனையில் மட்டுமே இந்த நவீன சிகிச்சை மையம் உள்ளது. அடுத்த  படியாக கம்பம் மருத்துவமனையில் தொடங்கப்பட உள்ளது.  இதனால் ஏராளமானோர் பயனடைவர், என்றனர்.

Courtesy – Dinakaran.com – http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=93003&cat=504

Advertisements