கம்பத்தில் பரவும் மர்ம காய்ச்சல்

பதிவு செய்த நேரம்:2012-09-12 12:39:32

கம்பம், : கம்பம், கூடலுர் பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வரு கிறது. 15வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள் ளனர்.
கம்பம், கூடலுர், காமயகவுண்டன்பட்டி, புதுப்பட்டி மற்றும் பல  கிராமங்களை சேர்ந்த 15வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கடந்த சில  தினங்களாக இருமலுடன் கூடிய மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு  வருகின்றனர். இவர்கள் தினமும் தனியார் மற்றும் அரசு மருத்து வமனைகளில் சிகிச்சை பெற்று வருகி ன்றனர். பருவநிலை மாற்ற த்தின் காரணமாக இந்த காய்ச்சல் பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது.  அரசு மருத்துவமனைக்கு வரும் இவர்களுக்கு ரத்தம், சிறுநீர்  பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது.
டாக்டர்கள் கூறுகையில், தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். சீதோஷ்ண நிலை  மாறியதால் காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக சிறுவர்கள்,  குழந்தைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். குடிநீரை காய்ச்சி  குடிக்க வேண்டும். கொசுக்கள் பெருகாத அளவிற் கு சுற்றுப்புறத் தை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும், என்றனர்.

Couretsy: Dinakaran.com – http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=93001&cat=504

Advertisements

உத்தமபாளையம் அருகே வாழை தோட்டங்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்: தடுக்க விவசாயிகள் புதிய வியூகம்

உத்தமபாளையம், செப்.11-

உத்தமபாளையம் பகுதியில் வாழை தோட்டங்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகள் தடுக்க விவசாயிகள் புதிய வியூகம் அமைத்து தடுத்து வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம், ராயப்பன் பட்டி, அனைப்பட்டி ஆகிய ஊர்களில் வாழை விவசாயத்திற்கு ஏற்றவாறு மண் வளம், மற்றும் இயற்கையான சீதோசனநிலை இருப்பதால் அதிகளவில் வாழை விவசாயம் நடைபெறுகிறது. இங்கு விளையும் வாழைதார்கள் சென்னை, பெங்ளூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பெரும் நகரங்களுக்கும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது.

சொட்டு நீர் மூலமாகவும், பாத்திகட்டி வாழை விவசாயம் செய்து வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பருவமழை பொய்த்துப் போனதால் நீர் நிலைகள் வறண்டும் முதல் போக நெல் நடவுபணி முழுமை பெறாமல் பெரும் பகுதி நிலங்கள் தரிசுகளாக காட்சி அளிக்கிறது, இந்த நிலையில் ராயப்பன் பட்டி, ஆனைமலையன் பட்டி உள்ளிட்ட இடங்களில் வாழை தோட்டங்களில் இரவு நேரங்களில் காட்டு பன்றிகள் நுழைந்து வாழை தார்களை நாசம் செய்து வருகின்றனர், வாழைதார்கள் பலன் கிடைக்கும் நேரத்தில் பாழாகி வருவதால் விவசாயிகள் மத்தியில் கவலை அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆனை மலையன் பட்டியை சேர்ந்த விவசாயி ரவி கூறியதாவது:-

காட்டுப் பன்றிகாளால் வாழை விவசாயம் கடுமையாக பாதிப்பு அடைந்து வருகிறது. சேதம் ஏற்படுத்தும் பன்றிகளை தடுக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல முறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் வெறுத்துப்போன நாங்கள் வாழை விவசாயத்தை காப்பாற்ற வாழை தோட்டங்களை சுற்றி இரண்டு கம்புகளை நட்டு கம்பு மீது உரசாக்கு பைகளை மாட்டி விடுவோம் இரவு நேரங்களில் வாழை தோட்டத்திற்கு வரும் காட்டுப்பன்றிகள் ஆள் அமர்ந்து உள்ளனர் என்று தோட்டத்திற்குள் வராமல் சென்று விடுகிறது, இதன்மூலம் வாழை விவ சாயத்தை காப்பாற்றி வருகிறோம்.

இவ்வாறு விவசாயி கூறினார்.

Courtesy:  Maalaimalar.com – http://www.maalaimalar.com/2012/09/11144855/uthamapalayam-Banana-plantatio.html

சாலையை சீரமைக்க கோரி ஹைவேவிஸ் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு

பதிவு செய்த நேரம்:2012-09-12 12:44:51

சின்னமனூர், : சாலையை சீரமைக்க கோரி ஹைவேவிஸ்  தொழிலாளர் கள் தொடர் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ள னர்.
சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பகுதியில் 10ஆயிரத்திற்கும்  அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். தேயிலை தோட்டங்களில்  சுமார் 3,500 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த 1978க்கு பின்னர்  ஹைவேவிஸ் சாலை சீரமைக்கப்பட வில்லை. இதனால் மரண  பள்ளங்கள் நிறைந்து சாலை ஆபத்தான வகையில் உள் ளது.  இதனால் ஹைவேவிஸ் பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின் றனர். பேருந்துகள் சரிவர செல்ல முடியவில்லை. இதர வாக  னங்களும் செல்ல முடியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரு கின்றன.
ஹைவேவிஸ் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நிர்வாகிகளின் கூ ட்டம் எச்.எம்.எஸ் தொழிற்சங்க குரூப் செயலாளர் முத்தை யா  தலைமையில் நடந்தது. எல்.பி.எப் குரூப் செயலா ளர் மனோகரன்  முன்னிலை வகித்தார். ஏ.டி.பி தொழிற்சங்க செயலாளர் சஞ் சீவிபாண்டி வரவேற்றார்.
ஐ.என்.டி.யூ.சி குரூப் செயலாளர் சண்முகம், நிர்வாகிகள்  அலெக்சாண்டர், அந்தோணி, துரைப்பாண்டி, மாரியப்பன், கர்த்  தர், பவுன்ராஜ், நாகராஜ், குமார், முருகன், மணி, கலைவாணர்,  சங்கிலிராஜ், பாண்டி மகராஜன், சுகு மாறன், பிச்சை, ராசு, சந் திரசேகர், ஆரோக்கியசாமி, தங்கையா, செல்வக்குமார் உள்பட  300பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம்: கடந்த 30வருடங்களுக்கும்  மேலாக சாலை சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக உள்ள து. சரி வர பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள்  அவதியடைகின்ற னர். கடந்த ஜூன் 19ம் தேதி ஒருநாள்  அடையாள வேலை நிறுத்தம் செய் தோம்.
பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை  எடுக்கவில்லை. செப்.15ல் மீண்டும் தொழிலாளர்கள் அடையாள  வேலை நிறுத்தம் செய்வது, செப்.24 ஹைவேவிஸ் பேரூராட்சி அலு  வலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் இருப்பது, அக்.2ல்  வாக்காளர் அடை யாள அட்டைகளை கலெக்டரிடம்  ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

Courtesy: Dinakaran.com – http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=93014&cat=504

Image: http://vromonatnet.com/travelblog/archives/category/places/meghamalai

கம்பம் அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ்க்கு நவீன சிகிச்சை மையம்

பதிவு செய்த நேரம்:2012-09-12 12:39:43

கம்பம், : கம்பம் அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய்க்கு நவீன  சிகிச்சை மையம் விரை வில் துவங்கப்பட உள்ளது.
கம்பம் அரசு மருத்துவமனையில் தற்போது பொது மருத்துவம், சி த்த மருத்துவம், தீக்காய பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி,  குழந்தைகள் நல மருத்துவம், கர்ப்பிணிகளுக்கான சீமாங் சென்டர்  உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு  வருகின்றன.
இங்கு செயல்பட்டு வரும் எய்ட்ஸ் தடுப்பு மையத்தில் உள்ள  வசதிகளை அதிகப்படுத்தி நோயாளிகளு க்கு நவீன சிகிச்சை  அளிக்கும் வகையில், இம்மாத இறுதியில் அனைத்து வசதிகளுடன்  கூடிய எய்ட்ஸ் தடுப்பு மையம் செயல்பட உள்ளது.
இந்த மையத்தில் ஒரு டாக்டர், பார்மசிஸ்ட் மற்றும் நர்சுகள் இரு ப்பர். ரத்தத்தில் 150க்கும் குறைவாக வெள்ளைஅணுக்கள் உள்ள  நோயாளிகளுக்கு ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை அளித்து ம ருந்து மாத் திரைகள் வழங்கப்படும். தற்போது வெளி நோயாளிகள்  பிரிவு செயல்படும் கட்டிடத்தில் இம்மாத இறு திக்குள் இந்த  மையம் தொடங்க உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
டாக்டர்கள் கூறுகையில், தமிழகத்தில் இந்த மையம் மாவட்டத் திற்கு ஒன்றும், ஒரு சில மாவட்டங் களில் இரண்டும் உள்ளது.  இந்நிலையில் தேனி மாவட்டத்தில் மருத்துவ கல்லுரி மருத்து மனையில் மட்டுமே இந்த நவீன சிகிச்சை மையம் உள்ளது. அடுத்த  படியாக கம்பம் மருத்துவமனையில் தொடங்கப்பட உள்ளது.  இதனால் ஏராளமானோர் பயனடைவர், என்றனர்.

Courtesy – Dinakaran.com – http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=93003&cat=504

Rains do not cheer farmers

 Rains do not cheer farmers

K. Raju

Published: September 11, 2012

Farmers belonging to Cumbum valley are unable to raise first crop in double cropping area

Though storage level in Periyar dam has crossed 120.8 feet, a basic requirement to release water for irrigation, and there is heavy downpour in the catchment areas, farmers in the district are not enthusiastic as more than 85 per cent of land in the Cumbum Valley remains barren.

This scenario is being attributed to the vagaries of nature as the rains have come too late to raise the first crop in the double cropping area. Though storage level in Periyar dam is good and Agriculture Department has sufficient stock of fertilizers and certified seeds, it is not of any help to farmers.

The Public Works Department officials have started releasing 400 cusecs of water for irrigation and it is more than enough to irrigate the entire Cumbum Valley. Water has been flowing through 17 channels – eight in Cumbum, seven in Uthamapalayam and the rest in Chinnamanur and Palanichettipatti. This water will be utilised for protecting 6,000 to 7,000 acres in Cumbum bloc only. But it will not be used for filling up major irrigation tanks like Karungattan Kulam in rain fed areas, says PWD sources.

Illegal tapping

The storage level at Vaigai dam is very low. Even with the release of water from Periyar dam, it was able to get a meagre 21 cusecs only. It was said that more than 350 cusecs was utilised even before the water reached Vaigai dam and the PWD officials have blamed illegal tapping for this situation.

But, according to representatives of farmers’ association, there is no illegal tapping as there are no agriculture activities beyond Cumbum or Uthamapalayam bloc. They point their fingers at manufacturers of packaged water manufacturers in Cumbum, Uthamapalayam, Veerapandi and Palanichettipatti, who, they allege, are the major beneficiaries. These units have been lifting a large quantum of water from the river and channels to produce packaged water and market them in large scale in the district.

At present, drinking water being supplied through combined drinking water schemes in municipalities and town panchayats is of poor quality and in a way it helps the packaged water manufacturing units who are thriving.


வழுக்கு மரம் ஏறும் போட்டி

கம்பம், : கம்பத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது.
கம்பம் யாதவர் சமுதாயம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. யாதவர் மகாசபை தலைவர் ராமசாமி, நாட்டாண்மை கிருஷ்ணசாமி தலைமை வகித்தனர். மேளதாளம் முழங்க சர்வ அலங்காரத்துடன் சுவாமி ஊர் வலம் நடந்தது.
இதைத்தொடர்ந்து வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி விழா நடந்தது. வழுக்குமரம் ஏறும் போட்டியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், பரிவட்டம் கட்டி மரியாதையும் செலுத்தப்பட்டது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிக ளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Courtesy: Dinakaran.com – http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=92453&cat=504

Image which is displayed is not an actual image.

கிடா வெட்டி விருந்து வைத்த கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்

செப்டம்பர் 11,2012

கம்பம்:தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் சார்பில்,அங்குள்ள சாமாண்டியம்மன் கோயிலில் கிடா வெட்டி விருந்து நடந்தது. ஏராளமான விவசாயிகள் இதில் பங்கேற்றனர். தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால், அணையின் நீர் மட்டம் உயரவில்லை. இதனால் கம்பம் பள்ளத்தாக்கில், 14 ஆயிரத்து 707 ஏக்கரில் நெல் சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் எழுந்தது. கம்பம் நகரில் மட்டும், ஊற்று நீரை பயன்படுத்தி நடவு மேற்கொண்டனர். தற்போது மழை பெய்து, அணையின் நீர் மட்டம் 120 அடிக்கு உயர்ந்ததால், கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நடவு மேற்காள்ளப்பட்டு வருகிறது.மழை தொடர்ந்து பெய்யவும், முதல் போக உற்பத்தி நன்றாக இருக்கவும், இறைவனை வேண்டி, கம்பம் விவசாயிகள் கிடா வெட்டி விருந்திற்கு ஏற்பாடு செய்தனர். ஆங்கூர்பாளையத்தில் உள்ள சாமாண்டியம்மன் கோயிலில், 5 ஆட்டு கிடாக்களை வெட்டி விருந்து வைத்தனர்.விவசாய சங்க தலைவர் ஓ.ஆர். நாராயணன், நீரினை பயன்படுத்துவோர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

— Courtesy: Dinamalar – http://www.dinamalar.com/district_detail.asp?id=545264